ஐ.பி.எல் தொடரின் 51ஆவது போட்டி : மும்பை – கொல்கத்தா இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக குறித்த இரு அணிகளும் 32 போட்டிகளில் மோதியுள்ளன.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்