தரவரிசையில் இந்திய அணி முன்னிலை

ஐ.சி.சி ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தும், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ளன.

ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணி 08வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையில், இந்திய வீரர் சுப்மன் கில் மற்றும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஒருநாள் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளனர்.

ஒருநாள் தரவரிசையில் சுப்மன் கில் 06வது இடத்துக்கும், ரோஹித் ஷர்மா 09வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.