ஹிக்கடுவை கடற்கரையில் கடலில் நீராடியபோது பலத்த கடல் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவரை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடந்த நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 38 மற்றும் 40 வயதுடைய ரஷ்ய தம்பதியினரே இவ்வாறு கடல் நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கடற்கரையில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான நசுர்தீன் மற்றும் குமார ஆகியோர் உடனடியாகச் செயற்பட்டு இருவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு பொலிஸ் அதிகாரிகள் முதலுதவி சிகிச்சைகளையும் வழங்கியுள்ளனர்.









