இன்றைய தங்கத்தின் விலை

நாட்டில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்ற நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 699,359 ரூபாவாக காணப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 197,400 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்