ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாகவும், தீயணைப்புப் பணிக்காக கோட்டை மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.