தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அவர் கைது செய்யப்பட்டமைக்கான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.










