சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று புதன்கிழமை மாலை 16:00 மணி முதல் நாளை வியாழக்கிழமை மாலை 16:00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.
மட்டம் 2 – அவதான நிலை (செம்மஞ்சள்)
பின்வரும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல
களுத்துறை மாவட்டம்: புளத்சிங்ஹல மற்றும் தொடங்கொட
கேகாலை மாவட்டம்: மாவனெல்ல மற்றும் அரநாயக்க
நுவரெலியா மாவட்டம்: நோர்வூட் மற்றும் அம்பகமுவ கோரளை
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, ஓபநாயக்க, குருவிட்ட, அயகம, எலபாத மற்றும் பெல்மடுல்ல
மட்டம் 1 – எச்சரிக்கை நிலை (மஞ்சள்)
பின்வரும் பகுதிகள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கொழும்பு மாவட்டம்: சீத்தாவக மற்றும் பாதுக்கை
காலி மாவட்டம்: நெலுவ, எல்பிட்டிய, தவலம, நியாகம மற்றும் கரந்தெனிய
களுத்துறை மாவட்டம்: பேருவளை, மில்லனிய, அகலவத்தை, மதுராவல, ஹொணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, மதுகம மற்றும் இங்கிரிய
கண்டி மாவட்டம்: உடபலாத, யட்டிநுவர, பஸ்பாகே கோரளை, உடுநுவர மற்றும் கங்க இஹல கோரளை
கேகாலை மாவட்டம்: கலிகமுவ, வரகாபொல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, கேகாலை, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் தெரணியாகலை
குருநாகல் மாவட்டம்: குருநாகல்
மாத்தறை மாவட்டம்: கொடபொல மற்றும் பிடபெத்தர
நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மேற்கு மற்றும் கொத்மலை கிழக்கு
இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, நிவித்திகலை, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியாகொடை மற்றும் பலங்கொடை
சீரற்ற வானிலை தொடர்ந்து நிலவுவதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இதுகுறித்த எச்சரிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துமாறும், மண் சரிவு, பாறை புரளுதல் அல்லது வழக்கத்திற்கு மாறான நீர் வரத்து போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பாதுகாப்புப் பிரிவினரும், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளனர்.










