சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்பற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, ரியாத்துக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு நிலைமைகள் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எமது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எமக்கு மிக உயர்ந்த முன்னுரிமையாகும்” என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
வர்த்தக விமானப் போக்குவரத்தை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான சூழல் நிலவுவதாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த இடைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தையோ அல்லது தமது பயண முகவர்களையோ தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.










