மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது போட்டி இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
குழு B யில் அங்கம் வகிக்கும் குறித்த இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முறையே 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களில் உள்ளன.