-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – தென்மராட்சி ஏ-9 வீதி கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த கனரக வாகனமும், அதற்கு எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










