கொழும்பு, கிராண்ட்பாஸ் மகாவத்தை பகுதியில் அமைந்துள்ள வரிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 25 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயணைப்புப் படையினர் தீயை அணைப்பதற்கும், அருகிலுள்ள சொத்துகளுக்குத் தீ பரவுவதைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.










