புதிய அலை கலை வட்டம் எவோட்ஸ்-2022 விருது வழங்கும் விழா

புதிய அலை கலை வட்டம் 43 ஆவது ஆண்டில் கால் பதிக்கும் நிலையில் புதிய அலை கலை வட்டம் எவோட்ஸ்-2022 விருது மற்றும் கலாமித்ரா விருது வழங்கும் விழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-10 இல் அமைந்துள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் புரவலர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

இதன்போது சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் எம் .ஜ.எம். இக்பால், ஜி.குணசேகரன்,  ஆனந்தகுமார் மற்றும் கலைஞர் பத்மநாதன் ஆகியோர் விருதுகளை வழங்கி வைத்தனர்.