கலாசார அதிகார சபை மூலமாக புத்தகங்கள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

நெனசர நூலக உதவி வேலைத் திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப் பட்ட பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான புத்தகங்களை கிண்ணியா கலாசார அதிகார சபை கச்சக்கொடித்தீவு பொது நூலகத்திற்கு  வழங்கி வைத்தது.

கிண்ணியா பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் உப தலைவர் கலாபூஷணம் கவிஞர் அ.கௌரிதாசன் மற்றும் கலாசார உத்தியோகத்தர் ஜே.எம்.ஹில்மி ஆகியோர் கலந்து கொண்டு நூலக பொறுப்பாளர் ஏ.ஆர்.முபாரக்கிடம் புத்தகங்களை கையளித்தனர்.