2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தார்.
தேவாலயத்திற்கு வந்த ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் வணக்கத்திற்குரிய ரொஷான் மகேசன் மற்றும் சீயோன் தேவாலய சபை நிருவாகிகளுடனும் கலந்துரையாடியதுடன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், தேவாலயத்தின் திருத்தப் பணிகளை ஜனாதிபதி அலுவலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான கௌரவ சாகல ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










