கடலில் நீராடிய மலேசிய பிரஜை உயிரிழப்பு

காலி மாவட்டத்தின் உனவட்டுன கடலில் நீராடிக்கொண்டிருந்த மலேசிய பிரஜையொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதுடைய மலேசியப் பிரஜையே இதன்போது உயிர் இழந்துள்ளார்.

குறித்த நபர் உனவட்டுன கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கிய நிலையில் அவ்விடத்திலுள்ளவர்கள் காப்பாற்றி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்