உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 3ஆம் திகதி உலக மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மதுபானப் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் மதுபானத்தைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் ஆகியவை இந்த தினத்தின் நோக்கங்களாகும்.
இதேவேளை, உலகளவில் மதுபானப் பாவனையால் வருடாந்தம் சுமார் 30 இலட்சம் பேர் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் மதுபானப் பாவனையால் ஏற்படும் உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.










