ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குத் தீவுகளில் இன்று புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன், சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்பதை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.