லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை மாடலாக லாவா ஷார்க் 2 5ஜி (Lava Shark 2 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் முக்கிய பீச்சர்கள் தெரிய வந்துள்ளன. இந்த லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
2025ஆம் ஆண்டு மே 23ஆம் தேதியில் லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியது. ஆகவே, இந்த மே மாதத்தில் அடுத்த ஷார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கு ஏற்ப லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதை, லாவா மொபைல்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
டிசைன் மற்றும் கலர் விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், டிஸ்பிளே, பேட்டரி, டியூரபிலிட்டி பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. 5ஜி மாடலாக இருப்பதால், அதற்கு ஏற்ப சிப்செட்டை எதிர்பார்க்கலாம்.
பட்ஜெட் மாடலாக இருப்பதால், யுனிசோக் சிப்செட் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், 5,00,000 மேல் அன்டுடு ஸ்கோர் கொண்ட சிப்செட் வர இருக்கிறது.
லாவா ஷார்க் 2 5ஜி அம்சங்கள் (Lava Shark 2 5G Specifications): 6.75 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க உள்ளது. நாள் முழுக்க பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஆகவே, 5000mAh பேட்டரி அல்லது அதற்கு மேல் கேபாசிட்டி கொண்ட பேட்டரி கிடைக்க வாய்ப்புள்ளது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. ஆகவே, இந்த விலைக்கு ஏற்ப பீச்சர்களை எதிர்பார்க்கலாம். இப்போது, முன்னதாக வெளியான லாவா ஷார்க் ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.