தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும்இ ‘கடல் கடந்து வாழும் தமிழ் சொந்தங்களின் உரிமைகள்இ பாதுகாப்பு மற்றும் நீதி கோரிக்கைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது செய்தியில்இ உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுடன் தமிழக அரசு என்றும் இணைந்திருக்கும் என விஜய் தெரிவித்துள்ளார்.