Sri Lanka Tamil News Site

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பற்சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு

- Advertisement -

 

கிளிநொச்சி நகர றோட்டறி கழகத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி தெற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பற்சுகாதார விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இச் செயலமர்வில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த 120 வரையான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் செயலமர்வின் பின்னர் பற்சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்பள்ளி மாணவரிடையேயும். பெற்றோர்கள் மத்தியிலும் மேற்கொள்வார்கள்.

- Advertisement -

செயலமர்வில் பற்சுகாதாரம் பற்றிய ஆரம்ப உரையை வைத்திய நிபுணர் மா.தவராசா வழங்கினார்.

வளவாளர்களாக கலந்து கொண்ட பேராதனை பல்கலைக் கழக பல்மருத்துவ பீட இறுதி வருட மணவர்களான உஷாங்கன், திவாகரன் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்து விளக்கமளித்தனர்,

முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் .யுவராசா,. ஆசிரியர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

 

- Advertisement -