மட்டக்களப்பில் ‘மனுஷி’ சிறுகதை நூல் வெளியீடும் அறிமுகமும்

 

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், தற்போது புலம் பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழ் இலக்கியத்தளத்தில் இயங்கிவருபவருமான சண். தவராஜாவின் ‘மனுஷி’ சிறுகதை நூல் வெளியீடும், அறிமுக நிகழ்வும் மட்டக்களப்பில் இடம்பெறவிருக்கின்றது.

மட்டக்களப்பு  மகுடம் கலை, இலக்கிய வட்டத்தின் பௌர்ணமி கலை, இலக்கிய நிகழ்வின் 47 ஆவது தொடராக எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதிகாலை 10 மணிக்கு (முழுமதி தினம்) இந்த நூல் வெளியீடும், அறிமுக நிகழ்வும் பிரபல இலக்கியவாதியும், படைப்பாளியுமான பேராசிரியர் செ. யோகராசா தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மகுடம் வி. மைக்கல் கொலினின் வரவேற்புரையுடன் இடம்பெறவிருக்கும் இந்த வெளியீட்டு நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ரூபி வலண்டினா பிரான்சிஸ், நூல் நயவுரையாற்றுவதுடன், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் கவிதாயினி திருமதி. சுதாகரி மணிவண்ணன் சிறப்புரையும் ஆற்றுவார்.

மூத்த எழுத்தாளர்களான எஸ்.எல்.எம். ஹனீபா, கவிஞர் செ. குணரத்தினம், கவிஞர். அ.ச. பாய்வா ஆகியோர் ‘மனுஷி’ முதன்மைப் பிரதிகளைப் பெற்றுக் கொள்வதுடன், நூலாசிரியர் சண். தவராஜா சுவிட்சர்லாந்திலிருந்து ஸூம் தொழில்நுட்பம் மூலம் ஏற்புரையும் ஆற்றுவார்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் இ.தேவஅதிரன் நிகழ்வின் இறுதியில் நன்றியுரையாற்றுவார்.

இந் நிகழ்வை கவிஞர் ஜி.எழில் வண்ணன் தொகுத்து வழங்கவுள்ளார்.

புலம் பெயர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் Zoom  மூலம் நிகழ்வில் இணையலாம். Zoom ID. 8997230363

இவ் புத்தக வெளியீட்டினை மின்னல் 24 செய்திகயின்  உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் எதிர்வரும் புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நேரலையாக காண முடியும். 

Facebool link :- https://www.facebook.com/Minnal24News