-வாழைச்சேனை நிருபர்-
வாழைச்சேனை பேத்தாழை பதியிலே வீற்றிருந்து வேண்டுவொருக்கு வேண்டுவென அருள் பாலிக்கும் ஸ்ரீ வீரையடி விநாயகர் பெருமானுக்கு சங்காபிஷேக உற்சவம் மிகச் சிறப்பாக இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்வாலயத்தில் வருடம் தோறும் 1008 சங்காபிஷேக உற்சவம் கும்பாபிஷேக நாளிலே உற்சவமாக செய்யப்பட்டு வருகின்றது.
- Advertisement -
கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ் நிலை காரணமாக இவ் உற்சவம் நடைபெறவில்லை.
ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வினை, ஆலய குரு சிவஸ்ரீ ககு.சிந்துகரன் சர்மா தலைமையில் ப்ரம்மஸ்ரீ இலஷ்மீகாந்த குருக்கள் நடைமுறைப்படுத்தினார்.
இவ் சங்காபிஷேக உற்சவத்தினை அமரர் நல்லதம்பி மாரிமுத்து அவர்களின் ஞாபகார்த்தமாக அவரின் மகன் யோகராசா என்பவர் நடாத்தியிருந்தார்.
- Advertisement -