சுரங்கமொன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் பலி : 15 பேரை காணவில்லை

சிம்பாவே – ஹராரேயில் சுரங்கமொன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்ததுடன் 15 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களை, தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.