இலங்கையின் பொதுத்துறை நிதி அமைப்புகளில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இணைய ஊடுருவல்கள் மற்றும் நிதி முறைகேடுகளைத் தொடர்ந்து, நாட்டில் பலமான இணைய ஆளுகையை (Cyber Governance) உருவாக்குமாறு தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நிபுணர்கள் குழுவினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் அமைப்பிற்குள் ஏற்பட்ட ஊடுருவல் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திசைதிருப்பப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து அவர்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் இணையப் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த சில யோசனைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்தநிலையில் முக்கிய நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதன் மூலம் இவ்வாறான நிதி இழப்புகளைத் தடுக்க முடியும் என அந்த நிபுணர்கள் குழு ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளது.