இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், தற்போது அதற்கான சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிவடைந்து தான் நலமுடன் இருப்பதாகவும் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தனது வருடாந்த மருத்துவ அறிக்கையை வெளியிடுவதில் இரண்டு மாதங்கள் தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் ஈரான் போன்ற நாடுகளின் “தவறான பிரச்சாரங்களைத்” (False propaganda) தவிர்ப்பதற்காகவே இந்தத் தகவலை மறைத்து வைத்திருந்ததாகத் தெரிவித்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கான (Enlarged benign prostate) அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சமீபத்திய பரிசோதனையில், ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில் ஒரு சிறிய தழும்பு இருப்பது கண்டறியப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் அது ஆரம்ப நிலையில் இருந்த ஒரு மாலிஞன்ட் கட்டி (Malignant tumour) என்பது உறுதியானது. இது உடலின் மற்ற பாகங்களுக்கு பரவவில்லை.
இதற்காக மேற்கொள்ளப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சையின் (Targeted treatment) மூலம் அந்தக் கட்டி முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது.
இது குறித்து பிரதமர் நெதன்யாகு விடுத்துள்ள அறிக்கையில்:”எனது புரோஸ்டேட்டில் ஒரு சிறிய மருத்துவப் பிரச்சினை இருந்தது, அதற்கு முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டது. இறைவனுக்கு நன்றி, இப்போது அது கடந்து போய்விட்டது. நான் தற்போது மிகச் சிறந்த உடல் நிலையில் உள்ளேன்.”எனத் தெரிவித்துள்ளார்.
நோயின் எவ்வித அறிகுறிகளும் இப்போது இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.