ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மறுதணிக்கை மற்றும் தேர்தல் காரணங்களால் தொடர் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் சந்தித்தது.
சில வாரங்களுக்கு முன் ஜன நாயகன் படம் முழுவதும் சமூக வலைதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது.
இது திரையுலகம் மற்றும் இரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையில் படத்தின் எடிட்டரிடம் வேலை பார்த்த ஒருவர் மூலம் இப்படம் கசிந்தது தெரிய வந்துள்ளது.
தேர்தல் முடிந்த பிறகு படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், படம் தொடர்பில் சென்சார் அதிகாரிகளினால் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ் விரைவில் கிடைக்கும் பட்சத்தில் ஜன நாயகன் திரைப்படம் எதிர்வரும் மே 8 ஆம் திகதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
படம் ஏற்கனவே இணையத்தில் கசிந்திருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை என்று இரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.









