கடந்த 11 ம் திகதி முதல் காணாமல் போனவரை 5 நாட்களாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்த ஸ்டரஸ்பி தோட்ட தொழிலாளர்கள்.இன்று செவ்வாய்க்கிழமை 16 ம் திகதி மதியம் 12 மணிக்கு சாமி மலை ஓயா வில் கண்டுபிடிக்கப்பட்டது.
நோய் வாய்பட்ட 55 வயதுடைய கிட்ணன் சிவபெருமானை தேடும் பணியில் ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற் கொண்டு வந்த வேளையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கவரவலை தோட்ட அப்பர் குரூடன் பகுதியில் ஊடறுத்து செல்லும் சாமி மலை ஓயா வில் கண்டுபிடிக்கப்பட்டது.
குமரி பிரிவில் உள்ள ஆற்றங்கரை அருகில் அவரது காலணி கிடப்பதை கண்டு அப் பகுதியில் இருந்து ஆரம்பிக்க பட்டு மவுஸ்சாகலை நீர் தேக்கம் வரை தேடுதல் பணியில் ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவில் உள்ள தொழிலாளர்கள் மேற் கொண்டு வந்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை முதல் தேடுதல் நடத்தி வந்த வேளையில் கவரவலை தோட்ட அப்பர் குரூடன் பகுதியில் ஊடறுத்து செல்லும் சாமி மலை ஓயா வில் சடலம் ஒன்று ஒதுங்கி கிடப்பதை கண்ட மக்கள் உடன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அருவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்த பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்ய உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.