கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
மேலும் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0–2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.
கடற்படையினரும் கடற்றொழில் சமூகத்தினரும் விழிப்புடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.