கண்டி – யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் கடுகஸ்தோட்டை, கலகல பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்து குறித்து கடுகஸ்தோட்டை பொலிஸாரிடம் நடத்திய வினவலின் போது, வேனில் பயணித்த 15 பாடசாலை மாணவ, மாணவிகளும் அதன் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக கடுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலையிலும், கண்டி தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர விபத்துச் சம்பவம் தொடர்பாக கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.