தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைச் சுட்டிக்காட்டி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சருக்குக் கண்டனம் தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் காட்டாட்சி வீழ்வது உறுதி!
why silent cm” என கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபகாலமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.