‘பண்டி’ உரம் எனப்படும் எம்ஓஎச் உரம் நாளை சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் 1000 ரூபாவால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.