வெலிகம, கப்பரதொட்ட கடற்கரையில் 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் தொகை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, மாத்தறை, மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 120 கிலோகிராமுக்கும் அதிகமான எடையுடைய ஆறு மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், மீட்கப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் தொகையின் எடை 100 கிலோகிராமுக்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(AI Image)









