ரயிலிலுடன் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
நேற்று புதன்கிழமை காலை நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்தில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி வெளிநாட்டவர் ஒருவர் பலத்த காயமடைந்திருந்தார்.
பின்னர் குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 76 வயதுடைய இத்தாலி நாட்டவராவார்.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








