திருகோணமலை -மாவிலாறு காட்டுப்பகுதியில் வைத்து, யானை தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று -பூநகர் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் நாகேந்திரம் (வயது 38) என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாவிலாறு காட்டுப்பகுதியில் மாடு பார்த்துக் கொண்டிருந்த போது யானை தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் உயிரிழந்துள்ளார்.
சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை, திடீர் மரண விசாரணை ஏ.ஜே.ஏ.நூருல்லா, இன்று புதன்கிழமை காலை பார்வையிட்டு விசாரணை செய்த பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








