பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், ஹோமாகம பொலிஸ் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த சம்பவத்திற்காக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவருக்கு மேலதிகமாக, அப்பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சேவையும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பிரதேசத்தைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார (வயது 29) எனும் வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
பொலிஸாரின் கடுமையான தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.










