முட்டை விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விசனம்

சதொசவில் முட்டை விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுகிறது.

சதொச ஒரு நபருக்கு 20 முட்டைகள் மட்டுமே வழங்குவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.