நீண்டகாலமாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நோர்வூட் – பொகவந்தலாவ – கெம்பியன் (B329) வீதியைப் புனரமைத்து மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த வீதியின் 10+500 கிலோமீற்றர் முதல் 16+890 கிலோமீற்றர் வரையிலான பகுதியைப் புனரமைப்பதற்காக தேசிய போட்டிப் பெறுகை முறைமையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.
இதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்ட மூன்று விலைமனுக்களைப் பரிசீலித்த உயர்மட்டப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒப்பந்தத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கணிசமான பதிலளிப்புகளுடன் கூடிய குறைந்தபட்ச விலையைச் சமர்ப்பித்த விலைமனுதாரருக்கு, பெறுமதி சேர் வரி (VAT) நீங்கலாக 756.99 மில்லியன் ரூபாய் பெறுமதியில் ஒப்பந்தத்தை வழங்குவதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்தப் புனரமைப்புத் திட்டத்தின் மூலம் குறித்த வீதியின் போக்குவரத்துத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.










