விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 150 கனமீற்றர் நீர் மகாவலி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனால் மகாவலி ஆற்றைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.










