வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படையினருக்கு வானிலை அவதான மையம் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகிலுள்ள தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் குறைந்த வளிமண்டல தாக்கம் இன்று வியாழக்கிழமை குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இது மேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 31ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்து, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் செயற்படுமாறும், எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை அறிவித்தல்களைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் வானிலை அவதான மையம் அறிவுறுத்தியுள்ளது.










