-சம்மாந்துறை நிருபர் சியாப் ஆக்கில்-
மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியின் என்.சீ.ரி.சிவில் என்ஜினியரிங் (NVQ5 ) இறுதி செமஸ்ர் பரீட்சைப்பெறுபேறு வெளியாகியுள்ளது.
(NCT.CIVIL .Engineering ,Construction Technology NVQ 5) பரீட்சைக்குத்தோற்றிய 32 மாணவர்களில் 9 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்லூரின் அதிபரும், தொழில்நுட்ப கல்விச்சேவையின் முதலாம் தர அதிகாரியுமான எம்.சோமசூரியம் தெரிவித்தார்.
இதில் பரீட்சைக்கு மீளத்தோற்றிய 9 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியில் TVEC (NVQ5 Construction Technology இறுதி கணிப்பீட்டிற்கு 18 பேர் தகுதி பெற்றுள்ளனர்.