பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வரை 6 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக போட்டியில் தமது 1ஆவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 366 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.