நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, பல மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை சிவப்பு நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
- களுத்துறை மாவட்டம்: புலத்சிங்கள, தொடங்கொட
- நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை, நோர்வூட்
- இரத்தினபுரி மாவட்டம்: ஓபநாயக்க, அயகம, குருவிட்ட, பெல்மடுல்ல, எலபாத்த
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்










