நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் உடல்நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
80களில் ரஜினிகாந்,கமல்,சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்து இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவர்.
கோழி கூவுது திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிய பிந்து கோஷ் தொடர்ந்து உறவுகள் மாறலாம், தூங்காதே தம்பி தூங்காதே, மங்கம்மா சபதம், விடுதலை போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவருக்கு தற்போது 76 வயதாகிறது.
வயது மூப்பின் காரணமாக கடந்த சில வருடங்களாக உடல்நலப் பிரச்சினையை எதிர்கொண்டுவந்தார்.
இந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் அவர் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.