தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் பொருளாதார பாதிப்பில் காணப்படும் திருமணமாகாத 111 ஜோடிகளுக்கு சிங்கப்பூர் தம்பதியினர் இன்று வியாழக்கிழமை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் உள்ள 111 ஜோடிகளுக்கே இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின், நிதியுதவியில் 111 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளும் அத்துடன் பணம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியினர் யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.