அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக, உள்நாட்டு சந்தையில் கையடக்கத் தொலைபேசிகள் (Mobile Phones) மற்றும் அதன் உதிரிப்பாகங்களின் (Accessories) விலைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளனர்.