கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட, சீன நாட்டவர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைப்பதற்காக தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கோரியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இருதரப்பு சட்டத்தரணிகளினாலும் முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேக நபரை வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.