போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்படி, ஏப்ரல் 10 முதல் 20 வரையிலான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ரூ. 536 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் மாத்திரம் 1,431,319 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பைப் பயன்படுத்தி வருவாய்க்குப் பங்களித்துள்ளன.
ஏப்ரல் 10 ஆம் திகதி, 161,847 வாகனங்கள் மூலம் ரூ. 59.8 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டு, மிக உயர்ந்த தினசரி வருவாய் பதிவாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றில் பயணித்த வாகனங்கள் மூலம் இந்த வருவாய் ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.