2025ஆம் ஆண்டில் குழந்தை தொழிலாளர் முறை தொடர்பாக 516 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய குழந்தை பாதுகாப்பு அதிகாரம் தெரிவித்துள்ளது.
குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக 173 முறைப்பாடுகள், குழந்தைகள் கடத்தல் தொடர்பாக 53 முறைப்பாடுகள் மற்றும் குழந்தைகளை யாசகம் எடுக்க வைப்பது தொடர்பாக 287 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
குழந்தைகளை வீட்டு வேலைகள், தெரு வியாபாரம், போதைப்பொருள் விற்பனை, யாசகம் மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும் என அதிகாரம் எச்சரித்துள்ளது.
மேலும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு ஆபத்தான 71 வகையான வேலைகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.