செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 21ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று (10) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுப் பணிகளின் போது மேலும் 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில், 4 சிறுவர்களினதும் 2 சிசுக்களினதும் என்புக்கூடுகள் உட்பட மொத்தம் 7 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தம் 339 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 318 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது