மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அண்மைக்காலமாக பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பச்சை மிளகாய் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விலை 1,300 முதல் 1,500 ரூபாய் வரையிலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1,800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
100 கிராம் பச்சை மிளகாயில் சுமார் 12 மிளகாய்கள் உள்ளதாகவும், அதன்படி ஒரு பச்சை மிளகாயின் விலை 15 ரூபாய் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.